தேஜாஜை நிராகரித்து விட்டு FA – 50 விமானத்தை மலேசியா தேர்வு செய்த காரணம் என்ன ??

  • Tamil Defense
  • March 20, 2023
  • Comments Off on தேஜாஜை நிராகரித்து விட்டு FA – 50 விமானத்தை மலேசியா தேர்வு செய்த காரணம் என்ன ??

கடந்த மாதம் மலேசிய விமானப்படை இந்தியாவின் இலகுரக தேஜாஸ் LCA Tejas போர் விமானத்தை நிராகரித்து விட்டு தென் கொரியாவின் KAI FA-50 இலகுரக போர் விமானத்தை தேர்வு செய்தது.

இதனையடுத்து 18 KAI Korean Aerospace Industries நிறுவனம் தயாரிக்கும் FA-50 இலகுரக போர் விமானங்களை தயாரிக்கும் ஆர்டரை தென்கொரியா பெற்று கொண்டது அதற்கான காரணமாக மலேசியா FA-50 நிருபிக்கப்பட்ட தளவாடம் என்பதை கூறியுள்ளது.

அதாவது மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மொஹம்மது ஹாசன் கூறும்போது FA-50 மிக சிறப்பான விமானம், பல்வேறு நாடுகள் வாங்கியும் வாங்கவும் உள்ளன, தங்கள் நாட்டு விமானப்படையினரை ஒரு புத்தம் புதிய விமானத்தை வாங்கி கொடுத்து சோதனை எலிகளாக மாற்ற விரும்பவில்லை என கூறியுள்ளார்.

கடந்த 15 வருடங்களாக 200 FA-50 விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்தோனேசியா, ஈராக், ஃபிலிப்பைன்ஸ், போலந்து, தாய்லாந்து மற்றும் தென் கொரிய விமானப்படைகளால் பயன்படுத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மலேசியா தேஜாஸ் விமானம் மலிவானது மேலும் அதிக சக்தி வாய்ந்தது என ஒப்பு கொண்டுள்ளது அதே நேரத்தில் ஏற்கனவே Mig-29 விமானங்கள் ஒய்வு பெற்றுள்ள நிலையில் Su-30MKM விமானங்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தேஜாஸ் தேர்வு செய்யப்பட்டால் விரைவான டெலிவரி இருக்காது என அஞ்சுவதும் ஒரு.காரணமாக கூறப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.