இந்தியாவுக்கு கனரக நீரடிகணைகள் (Heavyweight Torpedo) வழங்க இத்தாலி தயார் !!

  • Tamil Defense
  • March 6, 2023
  • Comments Off on இந்தியாவுக்கு கனரக நீரடிகணைகள் (Heavyweight Torpedo) வழங்க இத்தாலி தயார் !!

சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்திருந்தார், அப்போது இந்திய பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இத்தாலி இந்திய கடற்படையின் ஆறு கல்வரி நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான நூறு அடுத்த தலைமுறை BlackShark கனரக நீரடிகணைகளை விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

இவற்றை தயாரிக்கும் WASS நிறுவனம் இத்தாலியின் Augusta Westland குழுமத்தை சேர்ந்ததாகும் ஆனால் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தல் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டதால் மேற்குறிப்பிட்ட நீரடிகணைகள் தேர்வான பிறகும் வாங்க முடியவில்லை.

தற்போது இந்த தடை நீக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் இந்த ஒப்பந்தம் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, மேலும் கலவரி நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள ஒருங்கிணைந்த போர் கட்டுபாட்டு அமைப்பு இத்தாலிய நீரடிகணைகளுக்கான மென்பொருளை கொண்டுள்ளது.

ஆனால் ஜெர்மனியின் Atlas Elektronik மற்றும் ஃபிரான்ஸின் Naval Group விற்க முன்வந்துள்ள நீரடிகணைகளை வாங்கினால் அவற்றிற்கான மென்பொருளை மேற்குறிப்பிட்ட அமைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.