வருகிற 2024ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி முகமை ESA – European Space Agency சூரியனை ஆய்வு செய்யும் வகையிலான இரண்டு ஆய்வு கலன்களை இந்தியாவின் இஸ்ரோ ISRO உதவியுடன் விண்ணில் ஏவ உள்ளது.
இந்த சூரிய ஆய்வு நடவடிக்கைக்கு ESA “Proba-3” என பெயரிட்டுள்ளது, மேற்குறிப்பிட்ட இரண்டு கலன்களுமே ஒன்றாக இணைந்து பயணிக்கும் தற்போது இவை இரண்டும் விண்ணில் உள்ள சூழல்களில் எப்படி இயங்குகின்றன என்பதை கண்டறியும் சோதனைகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு ஆய்வு கலன்களும் உலகிலேயே முதல்முறையாக சூரிய கிரகணத்தின் போது சூரியனை சுற்றி உள்ள கரோனா அதாவது அதிக வெப்பமான மேல்பரப்பை ஆய்வு செய்ய உள்ளன இதற்காக இவை இரண்டும் அதிக உயர புவி வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.
இவற்றை நமது இஸ்ரோவின் மூன்றாம் தலைமுறை ஏவு வாகனமான PSLV எனப்படும் நான்கு நிலை ராக்கெட்டின மூலமாக விண்ணில் ஏவ உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.