
கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் தேதி சீன படைகள் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ஸே பகுதியில் அத்துமீறி ஊடுருவ முயன்றதை இந்திய படையினர் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தடுத்து நிறுத்திய நிகழ்வு நாம் அறிந்ததே.
இந்த நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி அளித்த தகவலை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல் தான் இந்திய படைகளுக்கு உதவியதாக கூறியுள்ளார்.
அதாவது இந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பில் இது புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது காரணம் இதுவரை இரண்டு ராணுவங்களும் உளவு தகவல்களை பரிமாறி கொண்டதாக வரலாறு இல்லை
இந்த முறை அமெரிக்கா சீன படைகளின் திட்டம் அவர்கள் ஊடுருவ உள்ள பகுதி அவர்களின் எண்ணிக்கை அவர்களின் பலம் குறித்த தகவல்களை அளித்த காரணத்தால் இந்திய படைகள் சீனர்கள் வரும்வரை காத்திருந்து விரட்டி அடித்ததாக கூறியுள்ளார்.
இதற்காக அமெரிக்கா சீன படைகளின் நிலைகள் மற்றும் நகர்வுகள் குறித்த செயற்கைகோள் புகைப்படங்களை உடனுக்குடன் இந்திய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.