சக்திமிக்க கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் கடலில் ஏவப்பட்டது- முழு தகவல்கள்
1 min read

சக்திமிக்க கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் கடலில் ஏவப்பட்டது- முழு தகவல்கள்

2வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் கடலில் ஏவப்பட்டது

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் ஐஎன்எஸ் ஆந்த்ரோத் என்று பெயரிடப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் (ASW SWC) கடலில் ஏவப்பட்டது.

முதலாவது கப்பலான அர்னாலா கடந்த ஆண்டு கடலில் ஏவப்பட்டது.இந்த கப்பல்கள் எதிரி நீர்மூழ்கிகளுக்கு எதிரான பாதுகாப்பை இந்தியாவிற்கு வழங்கும்.

ASW SWC இன் முதன்மைப் பணியானது கடலோர நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும்.
இந்தியக் கடற்பகுதியில் உள்ள 36 தீவுகளின் பாதுகாப்புக்கு INS Androth கப்பல் உதவும்.

இந்த கப்பல்கள் 77.6 மீட்டர் நீளமும் 10.5 மீட்டர் அகலமும் கொண்டவை. இந்த கப்பல்கள் அதிகபட்சமாக 25 நாட் வேகத்தை எட்டும்.

இந்த கப்பல்கள் அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் சக்தி மிக்கவை. அவை இலகுரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள்,  ஆயுத அமைப்பு (30 மிமீ துப்பாக்கி) மற்றும் 16.7 மிமீ ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.