சீன அச்சுறுத்தல்: இந்திய பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா திட்டம் !!

பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் Brahmos Aerospace நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ரானே சமீபத்தில் இந்தோனேசியா இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு அதீத நாட்டம் காட்டி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசும் போது இந்தோனேசியாவில் ஒரு குழு இருப்பதாகவும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும் அனேகமாக ஒரு வருடத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனவும்

இந்த ஒப்பந்தம் இறுதியானால் 200 மில்லியன் டாலர்கள் முதல் சுமார் 350 மில்லியன் டாலர்கள் வரையிலான தரை மற்றும் கப்பல் சார்ந்த கப்பல் எதிர்ப்பு பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்கப்படலாம் என கூறினார்.

இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரபவோ சுபியாந்தோ அவர்களின் செய்தி தொடர்பாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது தற்போது எதை பற்றியும் கூற முடியாது என தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.