இந்தியாவின் Fifth Generation Minus ஐந்தாம் தலைமுறை மைனஸ் போர் விமானம் !!
இந்தியா கடற்படைக்காகவே பிரத்தியேகமாக இரட்டை என்ஜின் போர் விமானமான TEDBF எனப்படும் போர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதனை தற்போது Fifth Generation minus ஐந்தாம் தலைமுறை மைனஸ் என வகைப்படுத்தி உள்ளனர், இந்த தகவலை ADA அமைப்பின் தலைவர் முனைவர் கிரீஷ் தியோதர் தெரிவித்துள்ளார்.
Fifth Generation Minus என்றால் ஐந்தாம் தலைமுறைக்கு சற்றே குறைவானது என பொருள்படும் அதாவது நான்காம் தலைமுறையின் சிக்கனமும் ஐந்தாம் தலைமுறையின் நவீனத்துவமும் கொண்டதாகும், இதனை 4.5 தலைமுறை என்பதுடன் குழப்பி கொள்ள கூடாது காரணம் அதில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் மிகவும் குறைவாகும்.
மேற்குறிப்பிட்ட Fifth Generation Minus எனும் வார்த்தையை அமெரிக்க விமானப்படையின் தலைமை தளபதி ஜெனரல் சால்ஸ் ப்ரவுன் ஜூனியர் தான் முதன் முதலாக பயன்படுத்தினார், அமெரிக்க விமானப்படையின் F-16 விமானங்களுக்கு மாற்றாக F-35 இன் நவீனமும் F-15 EX விமானத்தின் சிக்கனமும் கொண்ட போர் விமானம் ஒன்று தேவை என கூறிய போது அதனை வகைபடுத்த மேற்குறிப்பிட்ட வாக்கியத்தை பயன்படுத்தினார்.
தென்கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை கூட்டாக இணைந்து தயாரிக்கும் KF-21 BORAMAE தான் உலகின் முதலாவது Fifth Generation Minus போர் விமானமாகும், 2035ல் வெளிவரும் இந்த விமானத்தின் மேம்பட்ட வடிவம் தான் முழுமையான ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நமது முதல் 45 TEDBF போர் விமானங்களும் Fifth Generation Minus வகையை சேர்ந்தவையாக இருக்கும் 2040க்கு பிறகு வரும் TEDBF போர் விமானங்கள் அனைத்தும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.