
ஆண்டுதோறும் அமெரிக்க கடற்படை ஃபிலிப்பைன்ஸ அருகேயுள்ள குவாம் தீவில் உள்ள தனது ராணுவ தளத்தில் Exercise Sea Dragon எனும் பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிறீசிகளை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில்இந்த ஆண்டிற்கான Ex Sea Dragon 2023 பயிற்சிகள் கடந்த 15ஆம் தேதி துவங்கி உள்ளது வருகிற 30ஆம் தேதி வரை இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன.
இந்த பயிற்சிகளில் அமெரிக்க கடற்படையின் P8A, இந்திய கடற்படையின் P8I, ஜப்பானிய கடற்படையின் P1, கனேடிய விமானப்படையின் CP 140, கொரிய கடற்படையின் P3C ஆகிய விமானங்கள் பங்கு பெற்றுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பயிற்சிகளில் பன்னாட்டு படைகள் பல்வேறு வகையான பல்வேறு கட்ட ஒருங்கிணைந்த நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.