உலகின் மிக விலை உயர்ந்த செயற்கைகோளை பெற்று கொண்ட இந்தியா !!
1 min read

உலகின் மிக விலை உயர்ந்த செயற்கைகோளை பெற்று கொண்ட இந்தியா !!

இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து NISAR – NASA ISRO Synthetic Aperture Radar எனப்படும் செயற்கைகோள் திட்டத்தை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கூட்டாக செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த செயற்கைகோள் ஒரு SUV வாகனத்தின் அளவில் இருக்கும் இது உலகின் மிகவும் விலை மதிப்புமிக்க செயற்கைகோள் ஆகும் மேலும் இது தான் உலகிலேயே இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்கும் முதல் செயற்கைகோள் ஆகும்.

அமெரிக்க நாசா L Band SAR அதாவது L அலைவரிசை ரேடார், அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பு, ஒரு அதிநவீன ரெக்கார்டர் கருவி மற்றும் Payload Data Subsystem ஆகியவற்றை தனது பங்களிப்பாக தர உள்ளது

அதே நேரத்தில் இந்தியாவின் ISRO தனது பங்களிப்பாக S Band SAR S அலைவரிசையில் இயங்கும் ரேடார், Satellite Bus எனப்படும் கட்டுபாட்டு அமைப்பு, GSLV MK-2 ராக்கெட் மற்றும் ஏவுதல் தொடர்பான சேவைகளை வழங்க உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க விமானப்படையின் C-17 விமானத்தில் சமீபத்தில் அமெரிக்க செயற்கைகோள் பகுதி இந்தியா வந்து சேர்ந்துள்ளது, இந்த செயற்கைகோளின் ஒட்டுமொத்த மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் அதாவது 11,250 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.