மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் AFINDEX 2023 என்ற பெயரில் 20 ஆஃப்ரிக்க நாடுகளின் தரைப்படைகளுடன் இந்திய தரைப்படை வருகிற 21 முதல் அடுத்த 10 நாட்களுக்கு பிரமாண்ட போர் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த பயிற்சி இதற்கு முன்னரும் இதே புனே நகரில் அமைந்துள்ள ஆவ்ந்த் கன்டோன்மென்ட் பகுதியில் தான் நடைபெற்றது என்பதும் இந்த முறை நடைபெற உள்ள பயிற்சிகள் இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
கடந்த முறை நடைபெற்ற பயிற்சிகளில் போட்ஸ்வானா, எகிப்து, பெனின், கானா, கென்யா, மாரிஷியஸ், மெசாம்பிக், நமிபியா, நைஜர், நைஜீரியா, செனிகல், தென் ஆஃப்ரிக்கா, சூடான், தான்சானியா, உகாண்டா, ஸாம்பியா, ஸிம்பாப்வே உள்ளிட்ட 17 நாடுகள் பங்கேற்றன இந்தியா சார்பில் மராத்தா இலகுரக காலாட்படை ரெஜிமென்ட் Maratha Light Infantry Regiment பங்கேற்றது.
இந்த முறை நடைபெற உள்ள பயிற்சிகளில் மனிதாபிமான கண்ணிவெடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைகளின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் செயல்படுவது தான் இலக்காகும்.
அதன்படி புதிய அமைதிப்படை மையம் அமைப்பது, அமைதிப்படை நடவடிக்கைகளுக்காக புதிய தலைமையகம் அமைப்பது, பொது மக்களை பாதுகாப்பது, ராணுவ வாகன கான்வாய்களை பாதுகாப்பது, ரோந்து மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இதில் இருதரப்பும் தங்களது சிறந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.