
Madras IIT சென்னை ஐஐடியில் உதயமான சென்னையில் இருந்து இயங்கும் The ePlane Company எனும் நிறுவனத்தின் ட்ரோன் மீது இந்திய தரைப்படை ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனத்தின் ட்ரோன் 200 கிலோ எடை கொண்டது இதனால் 50 கிலோ எடையை சுமந்து கொண்டு மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டதாகும்.
இதில் 8 Propeller அதாவது உந்துவிசிறிகள் உள்ளன, 4 உந்துவிசிறிகள் செங்குத்தாக மேலேழும்பி தரையிறங்கவும், 4 உந்துவிசிறிகள் முன்னோக்கி செல்லவும் உதவும், மேலும் முகப்பு பகுதியில் இரண்டு தெர்மல் Thermal வெப்ப உணர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்தகைய ட்ரோனை மேற்குறிப்பிட்ட நிறுவனம் இந்திய கடற்படைக்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்றது என கூறி அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.