159 சுதேசி கவச வாகனங்களை பெற்று கொண்ட இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • March 27, 2023
  • Comments Off on 159 சுதேசி கவச வாகனங்களை பெற்று கொண்ட இந்திய தரைப்படை !!

சமீபத்தில் கல்யானி குழுமம் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்கும் M4 கவச வாகனங்களில் 159 வாகனங்களை இந்திய தரைப்படையிடம் ஒப்படைத்தது.

இந்த வாகனங்களை சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைக்குரிய பகுதியான அப்யேய் பகுதியில் இந்திய தரைப்படை பயன்படுத்த உள்ளது.

2017ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற மோசமான தெற்கு கார்தோஃபான் பிரச்சினைக்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபை UNISFA என்ற பெயரில் இடைக்கால அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது அங்கு தான் நமது வீரர்கள் அமைதிப்படையின் அங்கமாக இந்த வாகனங்களை பயன்படுத்த உள்ளனர்.

கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இயங்கும் இந்திய படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அமைப்புகள் பெறப்பட்ட நிலையில் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.