இந்தியா அமெரிக்கா இணைந்து EMALS , AAG அமைப்புகளை தயாரிக்க திட்டம் ??

இந்தியா சுமார் 65,000 டன்கள் எடை கொண்ட ஒரு நடுத்தர விமானந்தாங்கி கப்பலை உருவாக்குவதற்கான முதல்கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்தார்.

தற்போது இந்த விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான EMALS மற்றும் AAG அமைப்புகளை இந்தியாவிலேயே அமெரிக்க உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

EMALS – Electro Magnetic Aircraft Launch System எனப்படும் மின்காந்த விமான ஏவு அமைப்பு மற்றும் AAG – Advanced Arresting Gear எனப்படும் அதிநவீன விமான நிறுத்துல் அமைப்பு ஆகியவற்றை அமெரிக்காவின் General Electrics நிறுவனத்தின் உதவியோடு இந்திய பொதுத்துறை நிறுவனமான BEL – Bharat Electronics Limited தயாரிக்க விரும்புகிறது.

GE நிறுவனம் அமெரிக்க கடற்படையின் 1 லட்சம் டன்கள் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்களுக்கு மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளையுமே உலகிலேய முதன் முதலாக உருவாக்கிய அனுபவம் கொண்டது தற்போது நடுத்தர விமானந்தாங்கி கப்பல்களுக்கும் இத்தகைய அமைப்புகளை திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளதாக காலம் செல்ல செல்ல தான் இது சாத்தியமாகுமா என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.