ஆளில்லா படகை உருவாக்கும் இந்திய மற்றும் அமீரக நிறுவனங்கள் !!

இந்தியாவை சேர்ந்த Sagar Defence Engineering மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) சேர்ந்த EDGE Group ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு அதிநவீன ஆளில்லா படகு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

இந்த படகு 12.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை கடல்சார் கண்ணிவெடி எதிர்ப்பு போர்முறை, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் முறை, உளவு , கண்காணிப்பு சார்ந்த பணிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த ஆளில்லா படகிற்கு 120 USV என பெயர் சூட்டப்பட்டுள்ளது, இதில் ஒரு ரிமோட் மூலமாக இயக்கப்படும் 12.7 மில்லிமீட்டர் இயந்திர துப்பாக்கி இருக்கும் இதனால் அதிகபட்சமாக 55 நாட்ஸ் வேகத்தில் பயணிக்க முடியும் எனவும்

இந்த படகினால் ரேடார், கேமரா, சென்சார் உள்ளிட்ட அமைப்புகளுடன் 2500 கிலோ எடையை சுமந்து கொண்டு பயணிக்க முடியும் எனவும் EDGE குழுமம் இதன் வடிவமைப்பு தகவல்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் Sagar Defence நிறுவனத்திற்கு வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.