முதல் முறையாக சவுதி அரேபியாவில் இந்திய போர் விமானங்கள் !!
1 min read

முதல் முறையாக சவுதி அரேபியாவில் இந்திய போர் விமானங்கள் !!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள Cobra Warrior 2023 விமானப்படை கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ள இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

அப்போது செல்லும் வழியில் வயலாற்றில் முதல்முறையாக இந்திய விமானப்படை விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றன, அங்கு விமானங்களில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகளும் நடைபெற்றன.

இந்திய விமானப்படை விமானங்களை சவுதி அரேபிய விமானப்படையின் மூத்த அதிகாரிகள், இந்திய தூதர் சுஹேல் அஜாஸ் கான் மற்றும் இந்திய தூதரக பாதுகாப்பு துறை அதிகாரி கர்னல் க்ரெவால் ஆகியோர் வரவேற்றனர்.

இனி சவுதி அரேபியாவில் இருந்து இந்திய விமானப்படை விமானங்கள் நேரடியாக இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது, ஐந்து மிராஜ்-2000, இரண்டு C-17, ஒரு IL-78 டேங்கர் மற்றும் 145 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இங்கிலாந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைநிறுத்தம் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான இரு தரப்பு உறவில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.