Breaking News

மென்பொருள் பாதுகாப்பு ரேடியோக்களை பெறும் இந்திய போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • March 9, 2023
  • Comments Off on மென்பொருள் பாதுகாப்பு ரேடியோக்களை பெறும் இந்திய போர் விமானங்கள் !!

இந்திய விமானப்படை இஸ்ரேலிய பாதுகாப்பு துறை நிறுவனமான Rafael இடமிருந்து சுமார் 400 SDR – Software Defined Radio அதாவது மென்பொருள் பாதுகாப்பு கொண்ட ரேடியோ அமைப்புகளை பெற்று கொண்டு உள்ளது, கடந்த 2020ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ரேடியோக்களை இந்திய விமானப்படையின் அனைத்து Su-30 MKI, Dassault Mirage – 2000 மற்றும் LCA Tejas ஆகிய போர் விமானங்களில் பொருத்த உள்ளனர், இதற்காக 400 ரேடியோக்கள் வாங்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக சுகோய்-30 போர் விமானங்களில் இந்த ரேடியோக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, இந்த ரேடியோக்கள் மூலமாக. நமது விமானிகள் வானில் ஒருவருக்கு ஒருவர் எதிரி விமானிகளின் தகவல் இடைமறிப்பு அதாவது ஒட்டு கேட்பு இன்றி தொடர்பு கொள்ள முடியும்.

இதற்கு காரணம் பழைய ரேடியோ அமைப்புகளில் இருக்கும் பல்வேறு கருவிகளுக்கு பதிலாக இவற்றில் மென்பொருள் அமைப்புகள் இருக்கும் ஆகவே தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டு கேட்க முடியாது, இதற்கு முன் பாதுகாப்பற்ற நமது HAL உருவாக்கிய INCOM 1210A ரேடியோக்கள் பயன்படுத்தி வரப்பட்டது.

தற்போது அவற்றிற்கு பதிலாக தான் மேற்குறிப்பிட்ட Rafael BNET-AR/ Global Link ரேடியோக்கள் வாங்கப்பட்டுள்ளன, கூடவே மேம்படுத்தப்பட்ட RAM – 1701AS எனப்படும் உயரத்தை அளக்கும் மானியும் ரஃபேல் Dassault Rafale விமானங்களில் பொருத்தப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.