2024-2025 வாக்கில் CATS Warrior அமைப்பின் முதல் பறக்கும் சோதனை !!

  • Tamil Defense
  • March 6, 2023
  • Comments Off on 2024-2025 வாக்கில் CATS Warrior அமைப்பின் முதல் பறக்கும் சோதனை !!

HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆய்வு – மேம்பாட்டு (Engg – R&D) பிரிவின் இயக்குனர் முனைவர் திரு. டி கே சுனில் வருகிற 2024 – 2025ஆம் ஆண்டு வாக்கில் CATS Warrior அமைப்பின் முதலாவது பறக்கும் சோதனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

CATS warrior ஆளில்லா விமானமானது தானாகவே இயங்கும் திறன் கொண்டது, 1600 கிலோ எடையை சுமந்து பறக்கும் ஆற்றல் கொண்டதாகும், இதில் ஸ்டெல்த் விமானங்களில் உள்ளதை போன்று Internal Weapons Bay (IWB) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதனால் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த ஒரு SAAW – Smart Anti Airfield Weapon அதாவது அதிநவீன விமானதள எதிர்ப்பு ஆயுதம் என்ற ஏவுகணை மற்றும் இரண்டு ASRAAM ஏவுகணைகள் ஆகியவற்றை சுமக்கும் என கூறப்படுகிறது.

முனைவர் டி கே சுனில் மேலும் பேசும்போது இந்த விமானத்திற்கான முழு மின்னனு தரை இறங்கும் அமைப்பு, சக்கரங்கள், பிரேக்குகள் போன்றவை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் 9 கிலோமீட்டர் உயரத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது என கூறினார்.