நமது HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் பராமரிப்பு பனிமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் திறன்கள் அதிகமாகி உள்ளன, ஆகவே வருடத்திற்கு 16 விமானங்கள் என்ற நிலையிலிருந்து இனி 20 விமானங்கள் வரை பராமரிக்க முடியும்.
அதே போல் ஒற்றை விமானத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நிறைவடைய 30 மாத காலம் ஆன நிலை மாற போகிறது இனி 15 மாதங்களில் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விரிவாக்க பணிகள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக கருதப்படும் சுகோய்-30 போர் விமானங்களுக்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்க்கும் காரணம் அவற்றின் ஆயுட்காலத்தில் அவற்றின் அனைத்து மேம்பாட்டு, சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள இந்த பனிமனையில் தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு தான் பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்க சுகோய் – 30 போர் விமானங்கள் மேம்படுத்தபடுவதும், சுகோய் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் AL – 31 FP ரக என்ஜின்களின் பராமரிப்பு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என்பதும் கூடுதல் சிறப்பாகும்.