தனது போர் விமான தேர்வின் வெற்றியாளரை அறிவிக்க உள்ள இந்திய கடற்படை !!
இந்திய கடற்படை தனது விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தி கொள்ள ஏற்ற போர் விமானத்தை தேர்வு செய்ய நீண்ட நாட்களாக சோதனைகளை நடத்தியதும் இதில் Boeing F/A – 18 மற்றும் Dassault Rafale ஆகிய போர் விமானங்கள் கலந்து கொண்டதும் தெரியும்.
இந்த நிலையில் இந்திய கடற்படை விரைவில் இந்த சோதனையில் வெற்றி பெற்ற விமானம் குறித்த தகவலை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, அந்த வகையில் இந்திய கடற்படைக்கு 26 போர் விமானங்களுக்கான ஆர்டர் Dassault டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஏற்கனவே இந்திய விமானப்படை இயக்கி வரும் ரஃபேல் Rafale F3R ரக போர் விமானங்களுடன் கடற்படை ரஃபேல் Rafale M ரக போர் விமானம் சுமார் 70 சதவிகித அளவுக்கு ஒற்றுமையை கொண்டுள்ளதாகும்.
இதற்கிடையே அமெரிக்காவின் Boeing நிறுவனம் தற்போது புதிய உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ஆர்டர்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் சுமார் 40 ஆண்டு காலத்திற்கு பிறகு 2025ஆம் ஆண்டு தனது F-18 போர் விமானங்களின் தயாரிப்பை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.