LRLACM ஏவுகணையை 100% இந்திய மயமாக்க DRDO திட்டம் !!

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணைகளில் பல்வேறு மேற்கத்திய அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன, இந்த நிலையில் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதும் ரஷ்யாவுக்கு அவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை.

ஆகவே ரஷ்யாவின் ஏவுகணை பயன்பாட்டில் பலத்த தொய்வு ஏற்பட்டது இது ரஷ்ய போர் நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது, இதை தொடர்ந்து இந்தியா இதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது.

ஆகவே DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வரும் LRLACM – Long Range Land Attack Cruise Missile எனப்படும் தொலைதூர தரை தாக்குதல் க்ரூஸ் ஏவுகணைகளை 100% இந்திய மயமாக்க திட்டமிட்டு உள்ளது.

சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் இந்த ஏவுகணைகளின் முக்கியமான அமைப்புகளில் இருந்து முக்கியத்துவம் இல்லாத அமைப்புகள் வரை அனைத்தும் இந்திய மயமாக்கப்படும் இதன் காரணமாக 35 கோடி மதிப்புள்ள பிரம்மாஸ் Brahmos ஏவுகணையை விட இது விலை குறைவாக (12 கோடி) இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.