ரஷ்யா 21 மேம்படுத்தப்பட்ட Mig – 29 UPG ரக போர் விமானங்களை இந்திய விமானப்படையின் குறைந்து வரும் போர் விமான பலத்தை தற்காலிகமாக ஈடு செய்யும் நோக்கில் விற்பனை செய்ய முன்வந்த நிலையில் இந்திய விமானப்படையும் அதை பரிசீலனை செய்து வந்தது.
தற்போது இந்திய விமானப்படை இந்த திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, அதற்கு காரணமாக தற்போது ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் இந்திய விமானப்படையின் போர் விமான படை விலக்க திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன.
அடுத்த வருடம் இந்திய விமானப்படையின் Mig-29 போர் விமானங்கள் 40 வருட சேவையை நிறைவு செய்ய உள்ளன, தற்போதுள்ள மூன்று படையணி அதாவது 65 Mig-29 விமானங்கள் 2029 முதல் ஒய்வு பெற துவங்கி 2035ல் முழுவதும் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதிலாக LCA Tejas தேஜாஸ் போர் விமானங்கள் படையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.