மும்பையில் உள்ள MDL Mazagon Docks Limited கப்பல் கட்டுமான தளம் இந்திய கடற்படைக்கு ஆறு ஃபிரெஞ்சு Scorpene (kalvari) கல்வரி ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைத்து கொடுத்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனம் ஒரு முழுமையான சுதேசி நீர்மூழ்கி கப்பல்களை சாத்தியமாக்கும் எண்ணத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இந்த அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சுதேசி நீர்மூழ்கி கப்பல்களில் பொருத்தப்படும் வெளிநாட்டு அமைப்புகள் இருக்காது.
அந்த வகையில் லித்தியம் ஐயான் பேட்டரிகள், பேட்டரிகளை கண்காணிக்கும் அமைப்பு, அணுசக்தி மற்றும் டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கான PumpJet Propulsion அமைப்பு ஆகியவற்றை உருவாக்கும் பணிகளில் மூம்முரமாக ஈடுபட்டு உள்ளது, இவற்றை 12 அடுத்த தலைமுறை வழக்கமான நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பயன்படுத்தி கொள்ள முடியும்.
இது தவிர MDL நிறுவனம் MS – X02A எனப்படும் நடுத்தர நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி வருகிறது 2024ஆம் ஆண்டு இதன் சோதனை நடைபெற உள்ளது, இவற்றை சிறப்பு படை வீரர்களை எதிரி பகுதியில் களமிறக்க, லிம்பெட் கண்ணவெடிகளை கப்பல்களில் பொருத்த பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.