இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு மிதவை குண்டுகளை சோதிக்க உள்ள இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • March 5, 2023
  • Comments Off on இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு மிதவை குண்டுகளை சோதிக்க உள்ள இந்திய தரைப்படை !!

இஸ்ரேலிய நிறுவனமான UVision Air Ltd மற்றும் இந்திய நிறுவனமான Aditya Precitech Pvt Ltd APPL ஆகியவை இணைந்து தயாரிக்கும் PALM – 400 எனும் மிதவை குண்டை இந்திய தரைப்படை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PALM 400 ஒரு தொலைதூர குறைந்த சப்தம் , எளிதாக பார்வையில் சிக்காத, அதிக வெப்பம் வெளியிடாத, துல்லிய தாக்குதல் நடத்தும் மிதவை குண்டாகும் மேலும் இதனால் நிலையான மற்றும் நகரும் இலக்குகளை வெற்றிகரமாக அடையாளம் கண்டு தாக்கி அழிக்க முடியும்.

PALM – 400 மிதவை குண்டால் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும் மேலும் அதிக வெடிசக்தி (High Explosive), Fragmentation மற்றும் காங்கீரிட்டை துளைக்கும் மூன்று வெவ்வேறு வகையான வெடிகுண்டுகளை தேவைக்கேற்ப சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த PALM 400 மிதவை குண்டால் நடுவானில் பறந்து கொண்டு இருக்கும் போதே புறப்பட்ட இடத்திற்கே நடவடிக்கையை ரத்து செய்து விட்டு திரும்ப முடியும் அதே நேரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இலக்கை நோக்கி பாய்ந்து அழிக்க முடியும் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் சிக்கிம் மாநிலத்தில் இந்த மிதவை குண்டு சுமார் 18,000 அடி உயரத்தில் இருந்து ஏவப்பட்டு 19500 அடி உயரம் வரை சென்று பின்னர் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை Thermobaric வெடிகுண்டை வைத்து தாக்கி அழித்து சோதனை நடத்தினர் இனியும் பலகட்ட கடினமான சோதனைகள் நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.