சிங்கப்பூர் இந்திய ராணுவ கூட்டு பயிற்சிகள் நிறைவு !!

  • Tamil Defense
  • March 16, 2023
  • Comments Off on சிங்கப்பூர் இந்திய ராணுவ கூட்டு பயிற்சிகள் நிறைவு !!

Exercise Bold Kurukshetra என்ற பெயரில் 13ஆவது முறையாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ராணுவ தளத்தில் மார்ச் 6 முதல் 13ஆம் தேதி வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவங்கள் இடையே நடைபெற்ற கூட்டுபயிற்சி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் காரணமாக நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் இந்த முறை முதல் முறையாக இரண்டு ராணுவத்தினரும் கட்டளை மையத்தில் பட்டாலியன் மற்றும் ப்ரிகேடு அளவிலான திட்டமிடல் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்திய தரைப்படை நடத்திய இந்த பயிற்சியில் இந்திய தரைப்படை சார்பில் 27ஆவது கவச ப்ரிகேடு படையை சேர்ந்த வீரர்களும், சிங்கப்பூர் தரைப்படை சார்பில் அந்நாட்டின் கவச படை ரெஜிமென்ட்டின் 42ஆவது பட்டாலியன் வீரர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டு பயிற்சி நிறைவு விழாவில் சிங்கப்பூர் கவச படை துணை கட்டளை அதிகாரியான கர்னல் லிம் லிட் டாம் மற்றும் இந்திய தரைப்படையின் ப்ரிகேடியர் ஜெனரல் சமீர் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.