5ஆம் தலைமுறை போர் விமானங்களை இறக்குமதி செய்யுங்கள் பாராளுமன்ற நிலைக்குழு !!

  • Tamil Defense
  • March 24, 2023
  • Comments Off on 5ஆம் தலைமுறை போர் விமானங்களை இறக்குமதி செய்யுங்கள் பாராளுமன்ற நிலைக்குழு !!

Parliamentary Standing Committee on Defence பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழுவானது மத்திய அரசுக்கு அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விரைவாக இறக்குமதி செய்வதை பற்றி சிந்திக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

Hindustan Aeronautics Limited நிறுவனம் 40 LCA TEJAS இலகுரக போர் விமானங்களை டெலிவரி செய்ய தாமதம் செய்வதும் மேலும் விமானப்படையின் படையணிகள் பலம் குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது.

ஆகவே இந்த குறைகளையும் பின்னடைவுகளையும் விரைவாக குறுகிய காலக்கட்டத்தில் சமாளிக்க ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இறக்குமதி செய்வதை பற்றி அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் அமெரிக்க விமானப்படை தனது ஐந்தாம் தலைமுறை F-35A ரக போர் விமானங்களை காட்சிப்படுத்தியது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இந்திய வானில் பறந்தது அதுவே முதல் முறையாகும் இந்த நிகழ்வு கூட இந்த அறிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ADA அமைப்பு நமது சுதேசி ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டமான AMCA விற்கு சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி கோரியும் இதுவரை அரசின் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி அதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் திட்டம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.