அணுஆயுதங்களை பயன்படுத்துவோம்; உக்ரேனுக்கு இரஷ்யா கடும் எச்சரிக்கை

  • Tamil Defense
  • March 26, 2023
  • Comments Off on அணுஆயுதங்களை பயன்படுத்துவோம்; உக்ரேனுக்கு இரஷ்யா கடும் எச்சரிக்கை

கிரிமியாவைக் கைப்பற்றுவதற்கான உக்ரைனின் எந்தவொரு முயற்சியையும் மாஸ்கோ அணுவாயுத பதிலடியுடன் எதிர்கொள்ளக்கூடும் என்று ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.

வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய மெட்வெடேவ், கிரிமியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும் வாய்ப்பை நிராகரித்து, “இது ஒரு பிரச்சாரம், போரின் போது அவ்வாறு பிரச்சாரம் நடைபெறுதல் சாதாரணமே” என்று வலியுறுத்தினார்.

தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக பணியாற்றும் மெட்வெடேவ் மேலும் கூறுகையில், “கிரிமியாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியுடன் தொடர்புடைய ஒருவித தீவிர தாக்குதல் பற்றி நாம் பேசினால், அது சாத்தியமில்லை ” என கூறியுள்ளார்.

உக்ரேனில் மேற்கத்திய ஆதரவுடன் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்ததை அடுத்து 2014 இல் கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறியது. உக்ரைனும் கிரிமியாவை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

ரஷ்யாவின் ஒரு பகுதியை உடைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் என்று மெட்வெடேவ் வலியுறுத்தினார். “எனவே, அத்தகைய சூழ்நிலையில் இரஷ்யா எந்தவித ஆயுதங்களையும் பயன்படுத்தும் ” என பேசியுள்ளார்.