
கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிரம்மாஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவப்பட்டது, அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று இறுதியில் 3 விமானப்படை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவதாக ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்களில் ஒருவர் தான் விங் கமாண்டர் அபினவ் ஷர்மா இவர் தற்போது தனது பணி நீக்கம் தவறானது எனவும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் கூறி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை தளபதிக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கூறுவதாவது “நான் ஒரு பொறியியல் அதிகாரி, விபத்து நடந்த போது நான் அந்த படையணிக்கு பராமரிப்பு சார்ந்த பயிற்சியை வழங்கும் பணியில் தான் இருந்தேன் ஆனால் என் மீது ஏவுகணை லாஞ்சர் செயல்பாட்டை தடுக்க தவறியதாக குற்றம்சாட்டி உள்ளனர்,
ஆனால் அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு படையணியின் கட்டளை அதிகாரிக்கும் , தலைமை நடவடிக்கைகள் அதிகாரிக்குமானது ஆகும் அவர்கள் தான் எப்படி இயக்க வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது போன்ற பயிற்சிகளை அளிக்கும் பொறுப்பை உடையவர்கள் , ஆனால் இதனை எடுத்துரைக்க கூட விசாரனையில் நான் அனுமதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்