அருணாச்சல பிரதேசத்தில் சீட்டா வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • March 17, 2023
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் சீட்டா வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழப்பு

வியாழன் அன்று அருணாச்சல பிரதேசத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராணுவத்தின் விமானப் பிரிவு லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகிய இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தில், ஐந்து மாதங்களில் இது மூன்றாவது இராணுவ ஹெலிகாப்டர் விபத்து மற்றும் 15 ஆண்டுகளில் 13 வது விமான விபத்து ஆகும், இந்த விபத்துகளில் அருணாச்சலத்தின் முன்னாள் முதல்வர் டோர்ஜி உட்பட 92 இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒற்றை எஞ்சின், பல ரோல் ஹெலிகாப்டர் ஆன சீட்டா அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரியில் இருந்து சீன எல்லைக்கு அருகில் உள்ள அருணாச்சலத்தின் தவாங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது, ​​மோசமான வானிலையை எதிர்கொண்டது.பின் செயலிழந்த வானூர்தி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இரு விமானிகளும் உயிரிழந்தனர்.வீரவணக்கம்