HLFT-42 முதன்மை பயிற்சி விமானத்திற்கான சோதனை தளமாகும் HAWK – i பயிற்சி விமானம் !!

  • Tamil Defense
  • March 11, 2023
  • Comments Off on HLFT-42 முதன்மை பயிற்சி விமானத்திற்கான சோதனை தளமாகும் HAWK – i பயிற்சி விமானம் !!

நமது HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே தயாரித்துள்ள Hawk Mk132 AJT – Advanced Trainer Jet எனப்படும் அதிநவீன ஜெட் பயிற்சி விமானமானது Hawk – i எனவும் அழைக்கப்படுகிறது, இந்திய விமானப்படையிடம் இத்தகைய 106 விமானங்களும், இந்திய கடற்படையிடம் இத்தகைய 17 விமானங்களும் உள்ளன.

இவற்றை நாம் தொழில்நுட்ப பரிமாற்ற முறையின் கீழ் பிரிட்டனிடம் இருந்து தொழில்நுட்பத்தை பெற்று இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம் தற்போது இந்த விமானங்களுக்கு மற்றொரு மிக முக்கியமான பணி வரப்போகிறது அதாவது சுதேசி பயிற்சி போர் விமான திட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்க போகிறது.

அதாவது ஏரோ இந்தியா Aero India 2023 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட HLFT-42 Hindustan Lead In Fighter Trainer எனப்படும் ஹிந்துஸ்தான் முதன்மை பயிற்சி போர்விமானம் தயாரிக்க தேவையான சோதனைகளை மேற்கொள்ள இந்த Hawk i விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

HLFT-42 விமானத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கணிணி அமைப்பு, Fly by wire system, பாதுகாக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்பு, தகவல் பரிமாற்ற அமைப்பு உள்ளிட்டவற்றை இந்த விமானத்தில் இணைத்து செய்ய உள்ளனர், பின்னர் 4-5 ஆண்டு காலத்தில் உருவாக உள்ள HLFT-42 சோதனை விமானத்தில் இணைக்கப்பட்டு இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்படும்.

அதே போல் இலகுரக தேஜாஸ் போர் விமானமும் இந்த திட்டத்தில் மிக மிக முக்கியமான பங்கு வகிக்க உள்ளது காரணம் இதில் பயன்படுத்தப்படும் AESA FCR Fire Control Radar எனப்படும் தாக்குதல் கட்டுபாட்டு ரேடார், F-414 என்ஜின், Smart MFD Multi Functional Display போன்றவையும் HLFT-42 விமானத்தில் இடம்பெற உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.