ஜெர்மனி நீர்மூழ்கி ஆஃபர் மேலதிக தகவல்களை கோரிய இந்தியா !!

  • Tamil Defense
  • March 3, 2023
  • Comments Off on ஜெர்மனி நீர்மூழ்கி ஆஃபர் மேலதிக தகவல்களை கோரிய இந்தியா !!

ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems TKMS தைசன்க்ருப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்திய ஜெர்மன் அரசுகள் இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலமாக ஆறு அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை Project 75 India P-75I திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்கு அளிக்க ஆஃபர் செய்துள்ளது.

மேலும் இந்த ஆஃபரில் இந்திய கடற்படையின் தேவைக்கேற்ப பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் இந்திய தரப்பிடம் தெரிவித்ததை இந்திய தரப்பு மிகவும் பொறுமையுடன் கேட்டு கொண்ட நிலையில் இந்த ஆஃபரை பற்றிய முழு தகவல்களை அளிக்குமாறு இந்தியா ஜெர்மன் நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் இந்தியா எந்த அளவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்தை செய்ய ஜெர்மனி தயாராக உள்ளது, எதிர்காலத்தில் ஜெர்மனி உதவி இன்றி மேம்படுத்தல் ஆயுத இணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வழிவகுக்கும் விதமாக இந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை பொருத்த அனுமதிக்குமா, எந்தெந்த துணை அமைப்புகளை தர ஜெர்மனி தயாராக உள்ளது ஆகியவற்றை இந்தியா அறிய விரும்புவதே ஆகும்.