இந்திய தரைப்படைக்கு பெங்களூர் நகரில் இருந்து இயங்கி வரும் Newspace Research & Technologies Pvt Ltd எனப்படும் தனியார் நிறுவனமானது இரண்டு வெவ்வேறு விதமான ட்ரோன்களை டெலிவரி செய்துள்ளது.
அந்த நிறுவனம் Nimbus நிம்பஸ் மற்றும் Beluga பெலுகா எனப்படும் இரண்டு ஹெலிகாப்டர் போன்று இயங்கும் ட்ரோன்களை இந்திய தரைப்படை கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய 100 குழு ட்ரோன்களுக்கான ஒப்பந்தத்தின் பகுதியாக டெலிவரி செய்துள்ளது.
இந்த ட்ரோன்கள் 50 கிலோமீட்டர் இயக்க வரம்பை கொண்டவை ஆகும் மேலும் இவற்றால் தொடர்ந்து 3 மணி நேரம் பறக்க முடியும், இதில் நிம்பஸ் தனது திறன்கள் காரணமாக ஒரு பிரத்தியேகமான ட்ரோன் ஆகும்.
அதாவது நிம்பஸ் ட்ரோனை சமவெளி மற்றும் அதிக உயர பிரதேசங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும், மேலும் சிவில் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்றதாகும், இதனை தரையுடன் ஒரு வயர மூலமாக இணைந்து ஒரே இடத்தில் நிலையாக பறக்க வைத்து கண்காணிக்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.