இந்தியாவில் உள்ள அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கம் நிறுத்தம் !!

  • Tamil Defense
  • March 11, 2023
  • Comments Off on இந்தியாவில் உள்ள அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கம் நிறுத்தம் !!

சில நாட்களுக்கு முன்னர் மும்பை கடலோர பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ALH Dhruv த்ரூவ் ரக ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்தை சந்தித்து கடலில் தரையிறங்கியது.

இதை தொடர்ந்து இந்திய கடற்படை இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் முப்படைகள், கடலோர காவல்படை மற்றும் துணை ராணுவ படைகளில் உள்ள அனைத்து த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது இந்த விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு ஏதேனும் தீவிர பிரச்சினை உள்ளதா இல்லையா என கண்டறிந்து அப்படி ஏதேனும் இருந்தால் அதை சரி செய்துவிட்டு பறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மற்ற விபத்துகளை போலின்றி இந்த விபத்து சற்றே வித்தியாசமானது காரணம் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கும் போதே தீடிரென சக்தியை இழந்த நிலையில் விமானிகள் சாதுர்யமாக ஹெலிகாப்டருக்கும் உள்ளே இருந்தவர்களுக்கும் சேதமின்றி கடலில் தரை இறக்கினர்.

இதை தொடர்ந்து இவற்றை தயாரிக்கும் நமது HAL நிறுவனம் த்ரூவ் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வரும் படைகளுடன் இணைந்து இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன அந்த பிரச்சினை வேறு ஹெலிகாப்டர்களிலும் உள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.