பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள சென்னை பாதுகாப்பு துறை நிறுவனம் !!

  • Tamil Defense
  • March 27, 2023
  • Comments Off on பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள சென்னை பாதுகாப்பு துறை நிறுவனம் !!

சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள Data Patterns நிறுவனம் சமீபத்தில் பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான 27ஆவது செக் அவுட் கருவியை டெலிவரி செய்யும் விழாவை நடத்தியது இதில் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைவர் முனைவர் அதுல் ராணே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய Data Patterns நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் ஶ்ரீநிவாசகோபாலன் ரங்கராஜன் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் உடன் தங்களது நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும்

தற்போது சிவிலியன் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான ரேடார்களை வடிவமைத்து தயாரித்து வருவதாகவும்

விரைவில் இங்கிலாந்து நாட்டுக்கு Single Processing Avionics அமைப்பு, தென்கொரியாவுக்கு ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் சில துணை அமைப்புகள் மற்றும் ஒரு NATO நாட்டிற்கு ரேடார் ஆகிவற்றை ஏற்றுமதி செய்யு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இவை எல்லாம் ஏற்றுமதியே அல்ல என்றைக்கு நமது நாட்டிலேயே முழுமையாக சொந்தமாக ஒரு தளவாடத்தை வடிவமைத்து தயாரித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறோமோ அது தான் உண்மையான ஏற்றுமதி என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.