
சில வாரங்களுக்கு முன்னர் மும்பை கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ALH Dhruv Mk-3 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொச்சி விமான நிலையத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இதே ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
முதல் விபத்து நடைபெற்றதை அடுத்து இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை தங்களது த்ரூவ் ஹெலிகாப்டர்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்த நிலையில் தற்போது கடல்சார் த்ரூவ் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பிரச்சினை உள்ளதால் இரண்டு படைகளும் த்ரூவ்களை மீண்டும் இயக்க தொடங்கி உள்ளன.
விபத்தை சந்தித்த இந்திய கடற்படையின் IN – 709 மற்றும் கடலோர காவல்படையின் CG – 855 ஆகிய அடையாள எண்களை கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்களுமே தீடிரென சக்தி இழந்ததால் தான் விபத்தில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து முன்னாள் மூத்த ஹெலிகாப்டர் விமானிகள், துறை வல்லுனர்கள் மற்றும் பாதுகாப்பு துறை வல்லுனர்கள் ஆகியோர் இந்த ஹெலிகாப்டர்களில் என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து களையுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.