10 ஆண்டுகளில் 148 கப்பல்கள் இணைத்த சீனா ஆனால் 12 கப்பல்களை இணைத்த இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • March 14, 2023
  • Comments Off on 10 ஆண்டுகளில் 148 கப்பல்கள் இணைத்த சீனா ஆனால் 12 கப்பல்களை இணைத்த இந்திய கடற்படை !!

இந்திய கடற்படையின் தலலமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் இன்று தில்லியில் உள்ள விவேகானந்தா சர்வேதச ஃபவுன்டேஷனில் நடைபெறற கருத்தரங்கில் பேசினார் அப்போது ஒரு முக்கியமான அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஒரு பதிவு செய்தார்.

அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் சீன கடற்படையில் பல்வேறு வகையான சுமார் 148 போர் கப்பல்கள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இது தற்போது இந்திய கடற்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கைக்கு சமமானது எனவும் அதுவே இந்திய கடற்படையில் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 12 கப்பல்கள் மட்டுமே இணைந்துள்ளன என கூறியுள்ளார்.

மேலும் வளங்கள் கொழிக்கும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் வரலாறு காணாத அதிகார போட்டி நிலவுவதாகவும் இதன் காரணமாக மேற்குலகம் மற்றும் சீனா இடையே முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் நட்பு நாடுகள் மற்றும் மத்திய சக்திகளுக்கு இடையே ஏற்பட்டது போன்ற ஒரு மிகப்பெரிய ஆயுத போட்டி ஏற்பட்டுள்ளதாகவும்

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான மோதல் விரைவில் ஒன்றும் மாறப்போவது இல்லை ஆனால் மாறாக மிக நீண்ட காலத்திற்கு அது நீடிக்கும் இரண்டு நாடுகளும் மாரத்தான போன்றதோரு அதிகார போட்டியில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசுகையில் இந்திய கடற்படைக்காக கட்டபட்டு வரும் 43 கப்பல்களில் 2 தவிர அனைத்தும் இந்தியாவில் கட்டப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் மேற்கண்ட சவால்களை எதிர்கொள்ள தன்னை தகவமைத்து வருவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.