கடற்படை போர் விமானிகள் தட்டுபாட்டால் தடுமாறும் சீனா !!

  • Tamil Defense
  • March 31, 2023
  • Comments Off on கடற்படை போர் விமானிகள் தட்டுபாட்டால் தடுமாறும் சீனா !!

சீன கடற்படை விமானந்தாங்கி போர் கப்பல்களை படையில் இணைத்து வருகிறது தற்போது மூன்று கப்பல்கள் உள்ள நிலையில் இனி எதிர்காலத்தில் சூப்பர் கேரியர் எனப்படும் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்களை கட்டி படையில் இணைக்க விரும்புகிறது.

ஆனால் விமானந்தாங்கி போர் கப்பல்களை பொறுத்தவரையில் கடற்படை போர் விமானங்களும் அவற்றை இயக்கும் விமானிகளும் தான் பிரதானம், சீன கடற்படையோ இந்த இரண்டு விஷயங்களிலும் மிகவும் திணறி வருகிறது அதாவது நல்ல போர் விமானங்களும் இல்லை போதுமான விமானிகளும் இல்லை.

ஆகவே சீன கடற்படை மேல்நிலை பள்ளி கல்வி மாணவர்களை தங்களது பள்ளிகளில் இணைத்து பள்ளி மற்றும் உயர் கல்வியும் அளித்து அப்போதிலிருந்தே போர் விமானிகள் ஆவதற்கான அடிப்படை பயிற்சிகளை அளிக்கவும் பின்னர் கடற்படை போர் விமான இயக்கம் சார்ந்த தேர்வு நடத்தவும்

அதில் வெற்றி பெறுவோரை சீன கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கும் விமானிகளாகவும் தோல்வி அடைவோரை சீன விமானப்படை மற்றும் சீன கடற்படையின் தரை சார்ந்த போர் விமான படை அணிகளில் சேர்க்கவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது.

தற்போது பல சீன கடற்படை விமானிகள் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்குவதில் தேர்ச்சி பெறவில்லை ஆகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதையடுத்து தான் முன்னாள் ஆஸ்திரேலிய அமெரிக்க இங்கிலாந்து கடற்படை விமானிகளை வைத்து பயிற்சி அளிக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.

சீன கடற்படையை பொறுத்தவரை போர் விமானங்களும் பிரச்சினை தான் Shenyang J-15 விமானங்களில் பல பிரச்சனைகள் உள்ளன குறிப்பாக அவற்றின் என்ஜின் மற்றும் பறத்தல் கட்டுபாட்டு அமைப்புகளில் பிரச்சினைகள் சாதாரணமான ஒன்றாகும் இதனாலேயே மூத்த அனுபவம் வாய்ந்த விமானிகளின் தேவை அதிகமாக உள்ளது.

இனி சீனா உருவாக்கி படையில் இணைக்க உள்ள சூப்பர் விமானந்தாங்கி கப்பல்களில் ஒரு கப்பலுக்கு தலா 100 விமானிகள் வீதம் தேவைப்படும் இதையெல்லாம் கருத்தில் கொண்டே சிறு வயதிலேயே பயிற்றுவித்து விமானிகளை உருவாக்கவும் ஐந்தாம் தலைமுறை J-31 விமானத்தின் கடல்சார் வடிவத்தையும் சீன கடற்படை உருவாக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.