இந்திய போர் விமானத்தை வாங்குமாறு அர்ஜென்டினாவுக்கு அமெரிக்கா அழுத்தம் !!

  • Tamil Defense
  • March 30, 2023
  • Comments Off on இந்திய போர் விமானத்தை வாங்குமாறு அர்ஜென்டினாவுக்கு அமெரிக்கா அழுத்தம் !!

சமீபத்தில் சீன அரசு ஆதரவு ஊடகமான CCTV அர்ஜென்டினா விரைவில் சீன தயாரிப்பு JF-17 போர் விமானங்களை வாங்கவும் அர்ஜென்டினாவில் அவற்றை தயாரிக்க தொழிற்சாலை அமைக்கவும்

அதே தொழிற்சாலையில் JF-17 போர் விமானங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் விரைவில் அர்ஜென்டினா செய்து கொள்ள உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் மரியா எல்விரா சாலஸார் அர்ஜென்டினாவில் சீனாவின் போர் விமான தொழிற்சாலை அமைவது நல்லதல்ல இது மோசமான விஷயம் என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்க அரசு இந்தியா ஆஃபர் செய்துள்ள இலகுரக தேஜாஸ் போர் விமானம் அல்லது டென்மார்க் நாட்டின் அமெரிக்க தயாரிப்பு F-16 விமானங்களை வாங்குமாறு அர்ஜென்டினாவுக்கு ராஜாங்க ரீதியாக கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நோக்கம் சீனாவிடம் இருந்து அர்ஜென்டினா விமானம் வாங்கி சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதாகும், இந்தியா அர்ஜென்டினாவுக்கு பிரிட்டிஷ் பாகங்கள் இல்லாத பிரத்தியேக தேஜாஸ் LCA TEJAS விமானத்தை விற்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.