BSFல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு !!
1 min read

BSFல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு !!

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தை அறிவிக்கும் போது 4 ஆண்டு சேவைக்கு பிறகு ஒய்வு பெறும் வீரர்களுக்கு துணை ராணுவ படைகளில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்து படிப்படியாக அதிகாரப்பூர்வமாக துணை ராணுவ படைகளில் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது முதல்கட்டமாக எல்லை பாதுகாப்பு படையில் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது, இவர்களுக்கு 5 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வயது தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.