தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரம்மோஸ் விற்பனை- தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ரானே
பிலிப்பைன்ஸ் மரைன் கார்ப்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க கடந்த ஆண்டு $375 மில்லியன் ஆர்டரைப் பெற்ற பிறகு, இந்தோ-ரஷ்ய நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இப்போது ஏவுகணையை விற்க தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.இந்த வரிசையில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் விற்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்திய தனியார் நிறுவனமான டேட்டா பேட்டர்ன்ஸ் தயாரித்த உள்நாட்டு பிரமோஸ் ஏவுகணை செக்அவுட் கருவியை வெளியிட சிஇஓ ரானே சென்னை வந்தார்.இந்த நிகழ்வில் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை குறித்து பேசியுள்ளார்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரானே அவர்கள் டிஆர்டிஓ அந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வருவதாக பேசினார்.