இந்திய கடற்படை தற்போது இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை பயன்படுத்தி வரும் நிலையில் மேலும் இந்திய வரலாற்றிலேயே பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பல் மற்றும் ஒரு விக்ராந்த ரக விமானந்தாங்கி கப்பல் என இரண்டு கப்பல்களை பெற திட்டமிட்டு வருகிறது.
ஆனால் விமானந்தாங்கி கப்பல் படையணிகள் தற்போதுள்ள பலதரப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்து கொண்டு கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்போது உருவாகி வரும் கப்பல் எதிர்ப்பு ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பதை இந்திய கடற்படை நன்கு உணர்ந்துள்ளது.
சீனாவின் A2/AD Anti Access/ Area Denial அதாவது பல வகை ஆயுதங்களை கொண்டு எதிரி படைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதற்கான வியூகத்தை இந்திய கடற்படை நன்கு உணர்ந்துள்ளது இது தவிர பாகிஸ்தானுக்கும் சீனா அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கலாம் ஆகவே அடுத்த தலைமுறை கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை தடுக்கும் ஆற்றல் கொண்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்திய கடற்படை பெற விரும்புகிறது.
அந்த வகையில் வளி மண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இடைமறிக்கும் ஆற்றல் கொண்ட தொலதூர ஏவுகணைகளை BMD Phase-2 Ballistic Missile Defence பலிஸ்டிக் தடுப்பு அமைப்பின் இரண்டாம் பாகத்தின் கீழ் இந்திய கடற்படை தனது முன்னனி போர் கப்பல்கள் மற்றும் ஏவுகணை தாங்கி கப்பல்களில் இணைக்கவும்
அத்தகைய போர் கப்பல்களை இந்திய கடற்படை தனது விமானந்தாங்கி கப்பல் படையணிகளின் அங்கமாக்கவும் அதன் மூலமாக விமானந்தாங்கி கப்பல் படையணிகளுக்கு சிறப்பான பல அடுக்கு பாதுகாப்பை வழங்கவும் இந்திய கடற்படை திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.