இந்திய கடற்படைக்காக மலைக்க வைக்கும் பிரமாண்ட பிரம்மாஸ் ஒப்பந்தம் !!
1 min read

இந்திய கடற்படைக்காக மலைக்க வைக்கும் பிரமாண்ட பிரம்மாஸ் ஒப்பந்தம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படையின் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு பிரம்மாண்டமான ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 200 பிரம்மாஸ் க்ரூஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாக பயன்படுத்தி கொள்வதற்காக வாங்க உள்ளனர்.

விரைவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC – Defence Acquisitions Council எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இறுதி செய்து பிரதமர் தலைமையிலான CCS – Cabinet Committee on Security எனப்படும் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் இறுதி முடிவுக்காக அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது இறுதியாக எத்தனை ஏவுகணைகள் வாங்க வேண்டும் இத்தனை ஏவுகணைகள் வாங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் அதில் எவ்வளவு சலுகை விலை கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது தில்லி, கொல்கத்தா, விசாகப்பட்டினம், ராஜ்புத், ஷிவாலிக், தல்வார் ரகங்களை சேர்ந்த 10 முன்னனி கப்பல்களில் பிரம்மாஸ் ஏவுகணைகள் உள்ள நிலையில் இனி எதிர்காலத்தில் வர உள்ள 7 நீலகிரி ரக கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இவை பிரதான கப்பல் எதிர்ப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.