அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய ரஷ்ய போர் விமானிகளுக்கு வீர தீர விருது !!

  • Tamil Defense
  • March 19, 2023
  • Comments Off on அமெரிக்க ட்ரோனை வீழ்த்திய ரஷ்ய போர் விமானிகளுக்கு வீர தீர விருது !!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்கு சமீபத்தில் அமெரிக்க MQ-9 Reaper ட்ரோனை கருங்கடல் பகுதியில் வீழ்த்திய ரஷ்ய போர் விமானிகளுக்கு வீர தீர விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த பகுதியில் மற்ற நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆகவே தான் அமெரிக்க ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டதாகவும் தொடர்ந்து மற்ற நாடுகள் இந்த தடையை மதிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்க ஆளில்லா விமானமானது மார்ச்-14ஆம் தேதி கருங்கடல் பகுதியில் ரஷ்ய எல்லைக்குள் ரகசியமாக உள்நுழைய முயன்றதாகவும் அப்போது ரஷ்ய விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்ய போர் விமானங்கள் மீண்டும் தங்களது ட்ரோன் மீது எரிபொருளை கொட்டியதாகவும் கடைசியாக ஒரு விமானம் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் ப்ரோப்பலரை தாக்கியதால் கடலில் விழுந்ததாகவும் கூறியுள்ளது.