இந்தியாவில் இந்திய பிரங்கியை சோதனை செய்த அர்மீனியா !!

  • Tamil Defense
  • March 8, 2023
  • Comments Off on இந்தியாவில் இந்திய பிரங்கியை சோதனை செய்த அர்மீனியா !!

அர்மீனியா இந்தியாவிடமிருந்து KSSL – Kalyani Strategic Systems Limited நிறுவனம் தயாரிக்கும் MArG 155/39 ரக பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்தது நமக்கு நினைவிருக்கும் ஆனால் அவற்றை இந்தியாவிலேயே சோதனை செய்து தான் அர்மீனியா வாங்க முடிவு செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியா வந்த அர்மீனிய குழுவினர் மேற்பார்வையில் இந்திய தரைப்படை ஒடிசா மாநிலம் பாலசோர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலும் உள்ள சோதனை மையங்களில் மேற்குறிப்பிட்ட MArG 155/39mm ரக பிரங்கிகளை சோதனை செய்துள்ளது

அதன் பிறகு மீண்டும் அர்மீனிய குழுவினர் முன்னிலையில் 40நாட்கள் தீவிரமாக சோதனை செய்யபட்டு அனைத்து சோதனையிலும் வெற்றி அடைந்த காரணத்தால் அதில் திருப்தி அடைந்த பிறகே பாதுகாப்பு கண்காட்சியில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.