300க்கும் அதிகமான வானூர்திகளுக்கு ஒய்வளிக்க உள்ள அமெரிக்க விமானப்படை !!
2024 நிதியாண்டில் அமெரிக்க விமானப்படை சுமார் 320 பல்வேறு வகையான விமானங்களை படைவிலக்கம் செய்ய உள்ளது, இந்த எண்ணிக்கை உலகிலுள்ள பல நாடுகளின் ஒட்டுமொத்த விமானப்படையை விடவும் அதிகமாகும்.
32 ஐந்தாம் தலைமுறை F22 Raptor Block 20,
57 4ஆம் தலைமுறை வானாதிக்க F-15C/D Eagle,
42 “A-10” Warthog தரை தாக்குதல் விமானங்கள்,
1 “B-1B Lancer” சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானம்,
கடைசியாக அமெரிக்க விமானப்படையில் உள்ள 24 “KC – 10A” எரிபொருள் டேங்கர் விமானங்கள்,
கடைசி 31 “HH-60G” Pavehawk ஹெலிகாப்டர்கள்,
48 “MQ-9 Reaper” Block 1 ட்ரோன்கள்,
1 “RQ-4” Global Hawk ட்ரோன்
2 “E-3” Sentry AWACS விமானங்கள்,
3 “E-8C” JSTARS கண்காணிப்பு, தாக்குதல் கட்டுபாட்டு விமானங்கள்,
2 “EC-130J” தகவல் தொடர்பு விமானங்கள்,
3 A-29 Super Tucano இலகுரக தாக்குதல் விமானங்கள்,
52 “T-1A” Jayhawk இரட்டை என்ஜின் பயிற்சி விமானங்கள்.
இவற்றில் பல விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை ஆகும் சில விமானங்கள் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை ஆகவே பல நாடுகள் இந்த விமானங்களை வாங்கி பயன்படுத்தி கொள்ள முடியுமா என்பது பற்றிய சிந்தனைகளில் மூழ்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.