
பிரம்மாஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் Brahmos Aerospace நிறுவனத்தின் தலைவர் முனைவர் அதுல் ராணே சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சென்னை சிறுசேரியில் உள்ள Data Patterns எனும் தனியார் துறை ராணுவ மற்றும் ஏரோஸ்பேஸ் மின்னு அமைப்புகள் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான 27ஆவது செக் அவுட் கருவியின் டெலிவரி விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய முனைவர் அதுல் ராணே 2004ஆம் ஆண்டு முதல்முறையாக பிரம்மாஸ் ஏவப்பட்டது அப்போது வெறுமனே 13% இந்திய தொழில்நுட்பத்தை கொண்டிருந்தது ஆனால் 19ஆண்டுகள் கழித்து தற்போது தயாரிக்கப்படும் பிரம்மாஸ் ஏவுகணைகளில் சுமார் 75% இந்திய தொழில்நுட்பங்கள் உள்ளன எனவும்
ஆனால் இது ரஷ்யா உடனான கூட்டு தயாரிப்பு திட்டம் ஆகையால் 100% சுதேசி தெழில்நுட்பத்தை கொண்டதாக மாற்ற முடியாது சில தெழில்நுட்பங்களை அவர்களிடம் இருந்து வாங்கியாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதே போல் 75% சுதேசி தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதால் பிரம்மாஸ் ஏவுகணையின் தயாரிப்பு செலவும் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அவர் எந்தளவுக்கு குறைந்துள்ளது என்பது பற்றிய தகவலை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.