அக்னிபாத் வீரர்களுக்கு CISFல் 10% இட ஒதுக்கீடு !!

  • Tamil Defense
  • March 19, 2023
  • Comments Off on அக்னிபாத் வீரர்களுக்கு CISFல் 10% இட ஒதுக்கீடு !!

BSF Border Security Force எனும் எல்லை பாதுகாப்பு படையை தொடர்ந்து CISF Central Industrial Security Force எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையிலும் முன்னாள் அக்னிவீர் வீரர்களுக்கும் 10% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர எந்த தொகுதி அக்னிபாத் வீரர்களோ அதை பொறுத்து 5 முதல் 3 ஆண்டுகள் உச்சகட்ட வயது வரம்பு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது, இதற்கான அறிவிப்பு 1968 CISF சட்டத்தை சற்று மாற்றியமைத்து இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர முன்னாள் அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவ படைகளுக்கான உடல் தகுதி தேர்வில் இருந்தும் விளக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.