புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட 19 பயங்கரவாதிகளில் 8 பேர் கொல்லப்பட்டனர், 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளனர்: காஷ்மீர் ஏடிஜிபி
2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி, காஷ்மீர் மண்டல ஏடிஜிபி விஜய் குமார் செவ்வாய்க்கிழமை, மறைந்திருக்கும் 4 பயங்கரவாதிகளைத் தவிர, கொடிய தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் காஷ்மீரில் தற்போது 37 பயங்கரவாதிகள் உயிருடன் உள்ளதாக அவர் கூறியள்ளார்
செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் மண்டல ஏடிஜிபி விஜய் குமார், “2019 புல்வாமா தாக்குதலில் மொத்தம் 19 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் 8 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர், 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், 4 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்” என்றார்.