அணுஆயுதங்களை களமிறக்கும் இரஷ்யா – புதின் அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி புதின் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி அமெரிக்காவுடனான புதிய strategic ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் (START) அணு ஆயுத ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா இடைநிறுத்துவதாகவும், அணு ஆயுதங்களை ஆக்டிவ் செய்வதாகவும் புதிய அணு ஏவுகணை சோதனைகள் நடத்த உள்ளதாகவும் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
START என்பது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுத ஒப்பந்தமாகும், மேலும் இது 2026 இல் காலாவதியாக உள்ளது.இந்த ஒப்பந்தம் ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியது ஆகும்.
புதிய அணு ஆயுத அமைப்புகளை களமிறக்குவதன் மூலம், அமெரிக்க ஆய்வாளர்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்று புடின் கூறியுள்ளார்
உக்ரைனில் தனது போரைத் தொடர்வதாக புடின் உறுதியளித்தார், மேலும் இதில் ரஷ்யா தோற்கடிக்கப்படாது என்றும் உறுதிபட பேசியுள்ளார்.