ஏரோ இந்தியாவில் 800 சப்ரான் என்ஜின்களை ஆர்டர் செய்த டாடா நிறுவனம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்காக போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் மிகப் பெரிய விமானங்கள் கொள்முதலை மேற்கொண்ட பிறகு தற்போது டாடா நிறுவனம் 800 Safran LEAP என்ஜின்களை ஆர்டர் செய்துள்ளது.

வரலாற்றில் முதல் நிகழ்வாக 800க்கும் அதிகமான CFM (GE/Safran) LEAP என்ஜின்களை ஆர்டர் செய்துள்ளது.இந்த புதிய என்ஜின்கள் புதியதாக வாங்கப்பட உள்ள
210 Airbus A320/A321neo மற்றும் 190 Boeing 737 MAX விமானங்களில் பொருத்தப்படும்.