டாடா குழுமத்தின் புதிய ராணுவ கவச வாகனம் அறிமுகம் !!

  • Tamil Defense
  • February 22, 2023
  • Comments Off on டாடா குழுமத்தின் புதிய ராணுவ கவச வாகனம் அறிமுகம் !!

TATA GROUP டாடா குழுமத்தின் பாதுகாப்பு துறை பிரிவான TATA AEROSPACE & DEFENCE சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) கண்காட்சியில் தான் தயாரிக்க உள்ள கவச வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

அதாவது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research & Development Organisation உடன் இணைந்து உருவாக்கி வரும் இந்த புதிய கவச வாகனத்தின் மாதிரி காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.

WhAF – Wheeled Armoured Fighting Vehicle என பெயரிடப்பட்டுள்ள இந்த கவச வாகனம் ஒரு 8×8 வாகனம் ஆகும், இதில் தானியங்கி கியர் பாக்ஸ், மிதவை திறன், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் திறன் போன்றவை இருப்பதால் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய WhAF வாகனம் ஏற்கனவே TATA மற்றும் DRDO இணைந்து உருவாக்கிய WhAP வாகனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது எனவும் அல்லது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.